Main Menu

சபையில் மூன்று முக்கியமான கேள்விகளை தொடுத்தார் சஜித்

நாடாளுமன்ற அமர்வு இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பினர்.

எதற்காக அவசரநிலை விதிக்கப்பட்டது? ஏன் ஊரடங்கு உத்தரவு? சமூக ஊடகங்கள் ஏன் முடக்கப்பட்டன? என்பதற்கான காரணத்தை கூறுமாறு சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

நாட்டில் ஒரு சர்வாதிகாரத்தை கொண்டுவருவதற்கான ஒரு கொடூரமான முயற்சி இது என்றும் நீங்கள் தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை டொலர் நெருக்கடியை தீர்க்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் பண்டோரா ஆவணங்களில் பெயரிடப்பட்டவர்களின் பின்னல் சென்று பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...