Main Menu

கோத்தாபயவின் வாக்குகளை சிதைக்கவே 35 பேர் போட்டி : மஹிந்த ராஜபக்ஷ

நாட்டிற்கான எதிர்கால கொள்ளைகைககளை வெளியிடுவதற்கு பதிலாக  பொதுஜன பெரமுனவை விமர்சிப்பதே ஐ.தே.க கூட்டங்களின் பிரதான காரணமாகியுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ , கோத்தாபய ராஜபக்ஷவின் வாக்குகளை சிதைப்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளர்கள் 35 பேர் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குருணாகல் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது :

கோத்தாபய ராஜபக்ஷவின் வாக்குகளை சிதைப்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளர்கள் 35 பேர் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்காது. ஐக்கிய தேசிய கட்சி கூட்டங்களை நடத்துவது அவர்களது திட்டங்களையோ கருத்துக்களையோ கூறுவதற்கு அல்ல. மாறாக எம்மை விமர்சிப்பதற்காகவே கூட்டங்களை நடத்துகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு கூறிய அதே கதைகளை தற்போதும் மீண்டும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். 

ஆனால் அவர்கள் கடந்த நான்கரை வருடங்களாக செய்தவற்றைக் கூறவில்லை. மத்திய வங்கி பிணை முறி ஊழல் குறித்து யாரும் வாய்திறக்கவில்லை. ஆட்சியை கைபற்றியவுடனேயே ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகக் கூறி மேல் நீதிமன்ற நீதாவானை பதவி நீக்கியமை குறித்து பேசவில்லை.

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதி செயலாளரை இந்த அரசாங்கம் சிறையிலடைத்தது. இந்த அரசாங்கத்தில் இவ்வாறு பலரும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானார்கள்.

இவ்வாறு பழிவாங்கலையே பிரதானமாகக் கொண்டிருந்ததால் நாட்டிற்கு சேவை செய்வதற்கு அரசாங்கத்திற்கு நேரம் இருக்கவில்லை.

என்னால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு பெறப்பட்ட வெளிநாட்டு கடனை மீள் செலுத்துவதற்கு அதை விட மூன்று மடங்கு அதிக கடன் பெற வேண்டிய தேவை ஏற்பட்டதாகக் கூறுகின்றார்கள். ஆனால் மேலதிகமாகப் பெறப்பட்ட கடனுக்கு என்ன ஆயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

பகிரவும்...