Main Menu

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரு இலட்சத்தை நெருங்கியது உயிரிழப்புகளின் எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுவோரின் நாளாந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 84 ஆயிரத்து 404 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் ஆயிரத்து 174 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52 இலட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் குறித்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்று  அதிகரித்து செல்லும் இந்த காலப்பகுதியில் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...