Main Menu

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இந்த தேர்தலில், 26.5 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கு சுமார் 10 மாதங்கள் இருந்த நிலையில், பிரதமர் லீ ஹ்சியன் லூங் (Lee Hsien Loong) நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை கடந்த மாதம் அறிவித்தார்.

1950ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் லீயின் கட்சியே தொடர்ந்து ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறது.

2011ஆம் ஆண்டு இந்த கட்சிக்கு 60 சதவீதம் வாக்குகளே கிடைத்தது. கட்சித் தலைமைக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது. எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் லீ கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று விரும்பினாலும், கொவிட்-19 பேரிடரை அரசு எவ்வாறு கையாண்டது, 20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி போன்ற விடயங்கள் என்பதை வைத்தே, மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிகின்றது.

அதே சமயம், எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியும் பொதுத் தேர்தலில் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அந்நாட்டில் வாக்களிக்க வேண்டியது கட்டாயமாகும். 1950ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து மக்கள் செயல் கட்சி தொடர்ந்து வென்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...