Main Menu

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்க நிலை தேவை: பிரான்ஸ்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. ஆனால் தொற்றுகள் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கின்றன.

கொரோனா வைரஸின் புதிய வகைகள் பரவுவது குறித்த கவலைகள் மத்தியில், விரைவான அரசாங்க நடவடிக்கைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

கொவிட்-19 குறித்த தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞான சபையின் தலைவர் பேராசிரியர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி இதுகுறித்து கூறுகையில்,

‘பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒரு புதிய மேலும் பரவும் மாறுபாட்டை தரவு காட்டியுள்ளது. இப்போது சில பிரான்ஸ் பிராந்தியங்களில் 7-9 சதவீத தொற்றுகள் உள்ளன.

மேலும், அதை நிறுத்த கடினமாக இருக்கும். ஐரோப்பாவில் மற்ற நாடுகளை விட பிரான்ஸ் சிறந்த சூழ்நிலையில் உள்ளது.

நாங்கள் விதிமுறைகளை கடுமையாக்கவில்லை என்றால், மார்ச் நடுப்பகுதியில் இருந்து மிகவும் கடினமான சூழ்நிலையில் இருப்போம்’ என எச்சரித்தார்.

மேலதிக நடவடிக்கைகள் தேவையா என்று முடிவு செய்ய பிரான்ஸ் அரசாங்கம் புதன்கிழமை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...