Main Menu

கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது – இத்தாலி வைத்தியர்

கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக இத்தாலியைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவின் ஆபத்துக்கள் படிப்படியாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2,32,997 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அத்தோடு, 33,415 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே மாதத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தபோதும் சில கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இத்தாலியைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்த கொரோனாவின் பலமும் இன்றைக்கு இருக்கும் கொரோனாவில் பலமும் ஒன்று அல்ல என ஜெனோவா சான் மார்டினோ மருத்துவமனை தொற்று நோய்கள் பிரிவு தலைவரான மேட்டியோ பாசெட்டி கூறியுள்ளார். இதன் மூலம் இன்றைய கொரோனா தொற்று வித்தியாசமானது என தெளிவாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக இனி இத்தாலியில் இல்லை என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் சான் ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்க்ரிலோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன் துணியில் எடுக்கப்பட்ட தொற்று மாதிரிகளோடு ஒப்பிடுகையில், கடந்த 10 நாட்களாக துணியில் எடுக்கப்படும் மாதிரிகளில், வைரஸ் தொற்று, எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட முடியாத அளவில் இருந்தது.

சில நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர். எனவே அரசியல்வாதிகள், புதிய எதார்த்த நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. நாம் ஒரு சாதாரண நாடாக திரும்ப வேண்டும்.

அரசு எச்சரிக்கையுடன், விரைவில் கொரோனாவில் இருந்து வெற்றி பெறுவோம் என கூறுகிறது. கொரோனா தொற்று மறைந்துவிட்டது என்ற ஆய்வறிக்கையை ஆதரிக்க அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் நிலுவையில் உள்ளன.

எனவே இத்தாலியர்களை குழப்பாத வகையில் உறுதியாக கூற முடியுமென்பவர்களை அழைக்கிறேன் என இத்தாலிய சுகாதாரத்துறை துணை செயலரான சாண்ட்ரா ஜம்பா தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

அதற்கு பதிலாக இத்தாலியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றவும், கூட்டம் கூடுவதையும், அடிக்கடி கைகளை கழுவுவதையும், முகக்கவசம் அணியவும் அழைக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிரவும்...