Main Menu

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டது நியூசிலாந்து

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நபரும் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக 50 வயது மதிக்கத்தக்க ஒரே ஒரு பெண் நோயாளி மட்டுமே கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், அவரும் குணமடைந்ததைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நியூசிலாந்து சுகாதாரத்துறை இயக்குனர் ஆஷ்லே புளூம்பீல்டு, ‘இந்த மைல்கல் உண்மையில் நல்ல செய்தி. ஒட்டுமொத்த நியூசிலாந்தின் இதயத்தில் இருந்து நிகழ்த்தப்பட்ட சாதனை.

பெப்ரவரி 28ஆம் திகதிக்கு பின்னர் முதன்முறையாக கொரோனா நோயாளிகளும் இல்லையென்பது எங்கள் பயணத்தின் குறிப்பிடத்தக்க அடையாளம்.

ஆனால் நாங்கள் முன்னரே கூறியப்படி, கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வை தொடர்வது அவசியம்’ என குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு பசுபிக் நாடான நியூசிலாந்தில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதன்முறையாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது.

அதனைத்தொடர்ந்து 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் 1,154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேர் உயிரிழந்தனர். 1,482 பேர் குணமடைந்தனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 7 வாரங்கள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 14ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அதன் பின்னர் கடந்த 17 நாட்களில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...