Main Menu

கொரோனா தொற்று: நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் – அரசாங்கம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என ஆரமப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

இவ்வாறு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் கொரோனா கட்டுப்பட்டு நிலையத்தினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

அதில் ஏதேனும் சிக்கலான நிலைமைகள் ஏற்படின் உடனடியாக குறித்த நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்போது பல அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் உள்ளனர். இருப்பினும் நோயாளிகளை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் தாமதங்கள்இருப்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டார்.

பகிரவும்...