Main Menu

கொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிறுவனமான மொடேர்னா நிறுவனத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் மக்கள் பாவனைக்கு தடுப்பூசி வெளிவரும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இரு நிறுவனங்களும் தமது தடுப்பூசிகளை வடிவமைக்க மிகவும் புதுமையான சோதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவொரு சிறந்த நாள் என மொடேர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அடுத்த சில வாரங்களில் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக  குறித்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பகிரவும்...