Main Menu

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – தனித்து இயங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரையில் 2 கோடியே 61 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 8 இலட்சத்து 67 ஆயிரத்து 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், உலக நாடுகள் பல தனியாகவும் ஒன்றாகவும் இணைந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

எனினும் இதுவரையில் கொரோனா வைரஸுக்கு எதிரான சரியான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஏனைய நாடுகளுடன் இணைந்து தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து சந்தைப்படுத்த விருப்பமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பல நாடுகள் அங்கம் வகிக்கும் உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றுடன் இணைந்து செயற்படாமல், தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...