Main Menu

கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு

ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ந்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* கொரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உருவாக்கலாம்.

* ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை தமிழகத்திலேயே  உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு  தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும்.

* மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை தொழில்கூட்டு முயற்சி மூலம் உருவாக்க வேண்டும்.

* உற்பத்தி நிறுவனங்களுக்கு  தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் ஆதரவளிக்கும்.

* குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படும்.

* ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ந்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது.

பகிரவும்...