Main Menu

கொரோனா அச்சுறுத்தல்: கம்பஹாவில் சிகிச்சைக்காக மேலும் 3வைத்தியசாலைகள் ஒதுக்கப்படுகிறது

கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தோம்பே, ரதாவானா மற்றும் திவுலபிட்டிய அரச வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கம்பாஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி மிகாரா எப்பா கூறியுள்ளார

இதன்படி, கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவங்கொட வைத்தியசாலை உள்ளிட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நான்கு வைத்தியசாலைகள் ஒதுக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கம்பஹாவிலுள்ள இரண்டு பொது வைத்தியசாலைகள், கொரோனா தொற்று சந்தேகத்திற்குரியவர்கள் தொடர்பாக அவதானிக்கப்படுவதற்கு  பயன்படுத்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...