Main Menu

கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக்கோப்பை எங்களுக்கே- ஸ்டெயின்

கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் உலகக்கோப்பையை வெல்லுவோம் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்கா இதுவரை வென்றது கிடையாது. அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் ராசி கைக்கொடுப்பதில்லை. 2015 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக மழை குறுக்கீட்டதால் வெற்றி பெற இயலாமல் போனது.

இதுபோன்ற ஏராளமான சம்பவங்களை சொல்லலாம். இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பையை வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் போதுமானது என தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘எங்கள் அணியில் சில தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். குயின்டான் டி காக்கில் இருந்து 11-வது வீரர்கள் வரை மேட்ச் வின்னர்கள்தான். நோ-பால் போன்ற விஷயத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. அப்படியிருந்தால் நாங்கள் தொடரை கட்டாயம் வெல்வோம்.

நீங்கள் ரபாடாவை பார்த்தீர்கள் என்றால், அபாரமாக பந்து வீசி வருகிறார். அவரது பார்மை-ஐ தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் சர்வதேச போட்டிக்குள் நுழைந்து, அவரது வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். சில வீரர்கள் வருவார்கள், சிறப்பாக செயல்படுவார்கள். திடீரென்று சென்று விடுவார்கள். ஆனால், ரபாடா போன்ற வீரர்களை நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்’’  என்றார்.

பகிரவும்...