Main Menu

கொசோவோவின் புதிய ஜனாதிபதியாக வஜோசா ஒஸ்மானி தெரிவானார்!

தெற்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ஜனாதிபதியாக 38 வயதான வஜோசா ஒஸ்மானி (Vjosa Osmani) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

போருக்குப் பிந்தைய காலத்தில் நாட்டின் ஏழாவது மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக இவர் தெரிவாகியுள்ளார்.

இரண்டு நாட்கள் இடம்பெற்ற 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றின் விசேட அமர்வில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார்.

இதன்படி, வஜோசா ஒஸ்மானிக்கு ஆதரவாக 71 வாக்குகள் கிடைக்கப்பெற்றதுடன் இரண்டு எதிர்க் கட்சிகளும் சேர்பிய சிறுபான்மைக் கட்சியும் வாக்களிப்பைப் புறக்கணித்திருந்தன.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் தலைவரும் ஜனாதிபதியுமான ஹஷிம் தாசி, சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...