Main Menu

கொங்கோவில் வெள்ளத்தால் பேரழிவு : குறைந்தது 169 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

தலைநகரில் பெய்து வரும் கனமழையால் குறைந்தது 169 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் காரணமாக மேலும் 30 பேர் காயமடைந்தனர் என்றும் 280 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ள நிலையில் 38,000 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறந்தவர்களின் நினைவாக மூன்று நாள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என்றும் அவர்களின் உடல் கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் அடக்கம் செய்யப்படும் என்றும் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் குறைந்தது 20 வெவ்வேறு நாடுகளில் 8.2 மில்லியன் மக்கள் சமீபத்திய வாரங்களில் பெரிதுவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 2.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் அழிவடைந்துள்ளதாகவும் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...