Main Menu

கூகுள் நிறுவனத்திற்கு 7600 கோடி ரூபாய் அபராதம்!

வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டமைக்காக கூகுள் நிறுவனம் 7600 கோடி ரூபாய் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனத்திற்கு உலகெங்கும் கிளைகள் காணப்படுகின்ற நிலையில், பிரான்ஸ் தலைநகரில் இயங்கும் கூகுள் நிறுவனமே இவ்வாறு வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன்படி சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற இந்த விசாரணை தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அபராத தொகையை செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

பகிரவும்...