Main Menu

குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிப்பதற்காக மேலதிக கொடுப்பனவு வழங்கும் சிங்கப்பூர்!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் மேலதிக கொடுப்பனவை வழங்குகிறது.

தற்போதுள்ள தொற்றுநோய் பரவலினால், குடிமக்கள் நிதி பற்றாக்குறை, மன அழுத்தம் மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுடன் போராடுகையில், குழந்தை பெறும் திட்டத்தை பெற்றோர்கள் ஒத்திவைத்துள்ளனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு சிறப்பு கட்டணத்தை வழங்கி குழந்தைகளைப் பெற ஊக்குவிக்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் செலுத்தக்கூடிய தொகை குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இது அரசாங்கத்தால் வழங்கப்படும் மிகப்பெரிய குழந்தை மேலதிக கொடுப்பனவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகின் மிகக் குறைந்த பிறப்பு வீதங்களை கொண்ட நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், பல தசாப்தங்களாக பிறப்பு வீதங்களை உயர்த்த கடுமையாக போராடி வருகின்றது.

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற அதன் அண்டை நாடுகளில் சிலவற்றிற்கு இது முற்றிலும் மாறுபட்டது. அவை தங்கள் கொரோனா வைரஸ் முடக்கநிலையில் கர்ப்பத்தில் பாரியளவில் அதிகரிக்கும் வாய்ப்பை எதிர்கொள்கின்றன.

‘கொவிட்-19 தொற்றினால், சில பெற்றோர்கள் தங்கள் பெற்றோர் திட்டங்களை ஒத்திவைக்க காரணமாகிவிட்டது என்று எங்களுக்கு கருத்து வந்துள்ளது’ என்று சிங்கப்பூரின் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் தெரிவித்தார்.

மேலும், தொகைகள் பற்றிய கூடுதல் விபரங்கள் மற்றும் அவை எவ்வாறு செலுத்தப்படும் என்பது பிற்காலத்தில் அறிவிக்கப்படும் என ஹெங் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய குழந்தை மேலதிக கொடுப்பனவு அமைப்பு, தகுதியான பெற்றோருக்கு சிங்கப்பூர் டொலர்கள் 10,000 (டொலர்கள் 7,330, பவுண்டுகள் 5,644) வரை வழங்குகிறது.

சிங்கப்பூரின் கருவுறுதல் வீதம் 2018ஆம் ஆண்டில் எட்டு ஆண்டுகளின் குறைந்த அளவை எட்டியுள்ளது, அரசாங்க தரவுகளின்படி, ஒரு பெண்ணுக்கு 1.14 பிறப்பு என்ற விகிதத்தில். பல ஆசிய நாடுகள் கருவுறுதல் வீதங்களின் வீழ்ச்சிக்கு இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இது தொற்று வீழ்ச்சியின் போது மோசமடையக்கூடும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீனாவின் பிறப்பு வீதம் 70 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள் குடியரசு உருவானதிலிருந்து மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...