Main Menu

குரங்கு அம்மைத் தொற்று மீண்டும் அதிகரிப்பு! – அதிகம் பாதிக்கப்பட்ட Île-de-France

பிரான்சில் குரங்கு அம்மைத் தொற்று (variole du singe) அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

277 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பல மாகாணங்களில் இந்த நோய் பரவியிருந்தாலும், Île-de-France மாகாணமே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 195 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக, Occitanie இல் 16 பேருக்கும், Auvergne-Rhône-Alpes இல் 14 பேருக்கும், Nouvelle-Aquitaine இல் 16 பேருக்கும், Hauts-de-France இல் 12 பேருக்கும், PACA இல் 12 பேருக்கும், Normandy, Centre-val de Loire, Bourgogne-Franche-Comté, Grand-Est மாகாணங்களில் மூவருக்கும், Brittany இல் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேற்படி தரவுகளை, நேற்று ஜூன் 21 ஆம் திகதி Santé publique France வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரத்தில் 94 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...