Main Menu

காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது – ப.சிதம்பரம்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், நாட்டின் அனைத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும், முக்கிய தலைவர்களும்  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் சமூக வலைத்தளங்களிலும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தேர்தல் குறித்து இன்று காலை தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18.
‘நீட்’ தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டன. யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது தற்போது எளிதாகிவிட்டது. மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா? 

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...