Main Menu

கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் டாக்டர் எம்.எல். தவாலே நினைவு ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்கு தயார் செய்து கொண்டு இருந்துள்ளார்.

23 வயதுடைய மாணவியான அவரை 16 மருத்துவர்கள் சேர்ந்து ராகிங் செய்துள்ளனர்.  அந்த கல்லூரியில் படித்து வரும் மூத்த மாணவர்களான அவர்கள் மீது மாணவி அளித்த புகாரின்பேரில், ராகிங் தடுப்பு விதிமுறைகள் 1999 என்ற சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ராகிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுதல், கல்லூரி விடுதி மற்றும் உணவகத்துக்கு செல்ல தடை செய்யப்படுதல், சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் கல்வி உதவித்தொகையை திரும்ப பெறுதல், தேர்வு எழுதுவதில் இருந்து தடை செய்தல், வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் சேர முடியாமல் தடை செய்தல், கிரிமினல் குற்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாதல் என பல வித தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

பகிரவும்...