Main Menu

கடலில் இருந்து 56 அகதிகள் மீட்பு

பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி பயணித்த 56 அகதிகள் மீட்க்கப்பட்டுள்ளனர்.

நான்கு மீட்ப்புப்பணிகள் ஒரே நாளில் இடம்பெற்றுள்ளன. Calais, Dunkerque ம்ற்றும் Boulogne-sur-Mer நகர கடற்பிராந்தியங்களில் இந்த மீட்பு பணி இடம்பெற்றுள்ளது. சிறிய ஆபத்தான மீன்பிடி படகுகள் மூலம் குறித்த அகதிகள் பிரித்தானியா நோக்கி சென்றுள்ளனர்.

கடற்பிராந்திய காவல்துறையினர் இவர்களை மீட்டுள்ளனர். மொத்தமாக 56 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். மீட்க்கப்பட்டவர்களில் ஆறு சிறுவர்களும் நான்கு பெண்களும் அடங்குவர்.

அண்மைய நாட்களில் பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொள்ளுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி ஒரே நாளில் 828 பேர் கடல்மார்க்கமாக பிரித்தானியா நோக்கி படையெடுத்துள்ளனர்.

பகிரவும்...