Main Menu

ஒருவரை தடுப்பூசி போட கட்டாயப் படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவதாகும் – உயர் நீதிமன்றம்

ஒருவரை தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என மேகாலய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநில அரசு,  வணிகர்கள், கடைக்காரர்கள், ஓட்டுநர்கள் போன்றோர் தங்களது தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்தது.

இந்நிலையில், குறித்த விவகாரம் மேகாலய உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதிகள் மேற்படி தெரிவித்தனர்.

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி கட்டாயம் என்றும், தற்போதைய தேவையாக தடுப்பூசி உள்ளது எனவும் தெரிவித்த நீதிபதிகள் தடுப்பூசி செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவது என்றும் கருத்து தெரிவித்தனர்.

அரசியல் அமைப்பின் 19(1) ஆவது பிரிவின் கீழ் கூறப்பட்ட வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் மாநில அரசால் எடுக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...