Main Menu

ஒன்பதாவது நாள் வேலை நிறுத்தம்! – 75 வீத போக்கு வரத்துக்கள் தடை

இன்று வெள்ளிக்கிழமை தொடருந்து தொழிலாளர்கள் ஒன்பதாவது நாளாக மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  75 வீத போக்குவரத்துக்கள் இன்று தடைப்பட உள்ளன. மெற்றோக்களில் 1 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் வழக்கம் போல் இயங்கும். 4 மற்றும் 7 ஆம் இலக்க மெற்றோ நெருக்கடியான வேலை நேரத்தில் மட்டும் மூன்றில் ஒரு சேவை இயங்கும். தவிர,  2, 3bis,  5, 6,  7bis,  10, 12 மற்றும் 13 ஆம் இலக்க மெற்றோக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளன.  RER சேவைகளில் RER A இரண்டில் ஒன்று என பாதிக்கப்பட உள்ளது. RER B சேவைகளில் நெருக்கடியான வேலை நேரத்தில் மட்டும் மூன்றில் ஒரு சேவை இயங்கும். கார்-து-நோர் நிலையத்துக்கான இடைப்பட்ட சேவைகள் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. RER C சேவைகளில் சில நிலையங்களுக்கு மாத்திரம் ஒரு மணிநேரத்துக்கு நான்கு சேவைகள் எனவும் இயங்கும். RER D ஒரு மணிநேரத்துக்கு இரண்டு சேவைகள் செயற்படும்.  RER E சேவைகளில் பெரிதளவான சேவைத்தடை இல்லை.  ட்ராம் சேவைகளில் T2 , T5 , T6, T8 ஆகியவை வழமை போன்று இயங்கும். T7 மூன்றில் இரண்டும்,  T3b சேவைகள் ஐந்தில் நான்கும், T3a நான்கில் மூன்றும் இயங்கும்.  Transilien சேவைகளில், சராசரியாக மூன்றில் இரண்டு எனும் கணக்கில் இயங்கும். வழி N, வழி P, வழி R மற்றும் வழி U ஆகிய வழிச்சேவைகளில் சராசரியாக மூன்றில் ஒன்று எனும் கணக்கிலும் இயங்கும்.

பகிரவும்...