Main Menu

ஐ.நா.வில் தமிழர் பிரச்சனையைக் கையாள தனியான செயற்றிட்டம் தேவை – சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஐ.நா. விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் பெரும்பான்மையான நாடுகளும் ஒத்துழைப்பினை வழங்குவதன் ஊடாக மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய சார்ள்ஸ் நிர்மலநாதன், ‘என்னைப் பொறுத்தவரையில் ஜெனீவா விடயத்தை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கையாண்டாது போதாது. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் குழுவாக இயங்க நான் தயாராக உள்ளேன்.

அதாவது, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் ஒரு குழு அமைத்து புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்துக்கொண்டு தமிழ்த்தேசியம் சார்பாக செயற்படும் அமைப்புக்களையும் உள்வாங்கி, வெளிநாட்டு தூதுவர்களிடம் எமது பிரச்சனை தொடர்பாக முழுமையாக விளங்கப்படுத்தி, இறுக்கமான முடிவு எடுக்க வேண்டும்.

ஏனெனில், நாங்கள் நினைப்பவற்றை எல்லாம் ஐ.நா.வில் கொண்டு வர முடியாது. அதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை. ஆகக்குறைந்தது 24 நாடுகளின் உதவி தேவை. அவ்வாறு இருந்தால் தான் நாம் இவ்விடயங்களை செயற்படுத்த முடியும்’ என்றார்.

பகிரவும்...