Main Menu

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள்

16 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முதல்முறையாக மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது. 

இந்த போட்டிக்கான தகுதி சுற்று தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் அயர்லாந்து-டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பான இடம்பெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. 

இதே பிரிவில் ஜிப்ரால்டரில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை தோற்கடித்தது. 

‘டி’ பிரிவு லீக் சுற்று முடிவில் சுவிட்சர்லாந்து 17 புள்ளிகளுடன் முதலிடமும் (5 வெற்றி, 2 சமநிலை, ஒரு தோல்வி), டென்மார்க் 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 சமநிலை) 2 ஆவது இடமும் பிடித்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்வதுடன் இதுவரை 19 அணிகள் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...