Main Menu

ஐரோப்பாவில் கொரோனா தொற்று நிலவரம் !

ஐரோப்பாவில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, உலகளவில் அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட நாடுகளில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்சில் இதுவரை 30 இலட்சத்து 35 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 72 ஆயிரத்து 877 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 23 ஆயிரத்து 924 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு அதிக பாதிப்புக்கள் அடையாளம் காணப்பட்ட ஸ்பெயினில் 26 இலட்சத்து 3 ஆயிரத்து 472 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அங்கு 55 ஆயிரத்து 441 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு இத்தாலியில் மேலும் 13 ஆயிரத்து 331 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 இலட்சத்து 55 ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் பாதிப்பு எண்ணிக்கையில் 8 ஆவது இடத்தில உள்ள இத்தாலியில் இதுவரை கொரோனா தொற்றினால் 85 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனியில் 12 ஆயிரத்து 428 பேருக்கு கொரோனா தொற்று இறுதியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 21 இலட்சத்து 37 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது.

அத்தோடு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதியான 516 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 52 ஆயிரத்து 536 ஆக உயர்ந்துள்ளது.

பகிரவும்...