Main Menu

ஐரோப்பாவில் அரைவாசிப்பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப் படலாம் – WHO எச்சரிக்கை

அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவில் பாதி பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக, அலைபோன்று ஒமிக்ரோன் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்தியர் ஹென்ஸ் க்ளுஜ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில், இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஏழு மில்லியன் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வார காலப்பகுதியில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் இப்பகுதியில் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...