Main Menu

எனக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்தேன் – பிரியாவிடை உரையில் ட்ரம்ப்!

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது பிரியாவிடை உரையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை தாம் பொறுப்பெடுத்து செயற்பட்டதாகவும் அதற்காகவே மக்கள் தம்மை தெரிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி ட்ரம்ப் இன்னமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ, தோல்வியை ஒப்புக்கொள்ளவோ இல்லை.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்வுகளை முன்னிட்டு, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபடும் வாய்ப்பு காணப்படுவதாக, புலனாய்வு துறையினர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பதவியேற்பு நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளதுடன், ஏனைய அரசாங்க பிரதிநிதிகளும் பதவியேற்கவுளளனர்.

பகிரவும்...