Main Menu

எதிர்கட்சியினரின் புறக்கணிப்புக்கு மத்தியில் வெனிசுவேலாவில் தேர்தல்

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் சட்டமன்றத் தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிலையில், அதன் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், சோஷலிச ஜனாதிபதி நிகோலஸ் மடுரோவின் கைகளுக்கு மீண்டும் ஆட்சி செல்லும் என கூறப்படுகிறது.

மடுரோவுடன் இரண்டு வருடங்கள் அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜூவான் கைடோவின் தலைமையில் எதிர்த்தரப்பு இந்த சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

அமெரிக்கா மற்றும் 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் வெனிசுவேலாவின் சட்டபூர்வமான தலைவராக நிகோலஸ் மடுரோவை அங்கீகரிக்கின்றன.

இந்நிலையில், நேற்றைய தேர்தலை ஒரு மோசடி எனக்குறிப்பிட்டுள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ, இந்த முடிவுகள் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்காது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பும் இந்த தேர்தல் முடிவை அங்கீகரிக்காது எனக்கூறியுள்ளது.

இதேவேளை, நேற்று வாக்களிப்பில் பங்கேற்ற பின்னர் கருத்து வெளியிட்ட நிகோலஸ் மடுரோ, இந்தத் தேர்தல் வெனிசுவேலாவின் மீட்பு சகாப்தத்தின் ஆரம்பம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...