Main Menu

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டு பிடிக்க கிரேக்கத்திற்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

இஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய கிரேக்கத்திற்கு ஆராய்ச்சியாளர்களை இஸ்ரேல் அனுப்பியுள்ளது.

இஸ்ரேலில் இருந்து சுமார் 50 கி.மீ. கடலோரப் பாதையில் சென்ற ஒரு கப்பலில் இருந்து கசிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஆராச்சியாளர்களை அனுப்பியுள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் வரை அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என இஸ்ரேஸ் அறிவித்துள்ளது.

இருப்பினும் கப்பல் பற்றிய விவரங்களை இஸ்ரேல் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...