Main Menu

எட்டு நாட்கள் கலவரம் – 650 மில்லியன் யூரோக்கள் காப்பீடு கோரிக்கை

Nahel எனும் இளைஞன் காவல்துறை அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதைடுத்து நாடு முழுவதும் பலத்த வன்முறைகள் இடம்பெற்றிருந்தது. எட்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வன்முறையில் 650 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக காப்பீட்டாளர்கள் சம்மேளம் ( la fédération professionnelle des assureurs,) அறிவித்துள்ளது.

வன்முறை பதிவான 8 நாட்களிலும் மொத்தமாக 3,900 உடமைகள் சேதமாக்கப்பட்டிருந்தன. இவை தவிர்த்து வாகனங்கள் சேதமாக்கப்பட்டிருந்தமை, சிறு மற்றும் பெரு வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. மொத்தமாக 11,300 பேர் காப்பீடுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும், மொத்தமாக 650 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்சின் பொருளாதார அமைச்ச்சர் Bruno Le Maire முன்னதாக தெரிவிக்கையில், இழப்பீட்டுக் கோரிக்கைகான கால அவகாசத்தை நீடிக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். அதன் பின்னரே இன்று இறுதிக்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு பிரான்சில் வன்முறைகள் ஏற்பட்டிருந்த போது 204 மில்லியன் யூரோக்கள் காப்பீடு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் 27 ஆம் திகதி Nanterre நகரில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் Nahel எனும் இளைஞனை துப்பாக்கியால் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பலத்த வன்முறைகள் பதிவாகியிருந்தன.

பகிரவும்...