Main Menu

ஊரடங்கை ஒரேடியாக தளர்த்த வாய்ப்பில்லை – மருத்துவ நிபுணர் குழு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாக தளர்வு செய்ய வேண்டும் எனவும், ஒரேடியாக தளர்த்த வாய்ப்பில்லை எனவும்  மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து தேசிய தொற்றுநோய்  பயிலகத்தின் துணை இயக்குநர் பிரதீப் கௌர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர் “தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா  பரிசோதனையைக் குறைக்கக் கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மற்ற இடங்களை விட தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா  பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும் என்பதே முக்கியம்.

பணி இடங்களில் ஒரு மீட்டர் தனி நபர் இடைவெளியில் பணியாளர்கள் பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா  பாதித்த ஒவ்வொருவரிடமும் தொடர்பில் இருந்த 20 பேர் கண்டறியப்பட்டு சோதனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...