Main Menu

உலகிலேயே முதல் முறையாக கியூபாவில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி!

உலகிலேயே முதல் முறையாக இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை கியூபா தொடங்கியுள்ளது.

அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடும் பணியை கியூபா தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) முதல் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது.

கியூபாவின் மத்திய மகாணமான சியன்பியூகோஸ் பகுதியில் குழைந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளது.

சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுவேலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தாலும், கியூபாவில் முதன் முறையாக போடப்பட்டுள்ளது.

கியூபாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை.

கியூபாவில் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பாடசாலைகள்; படிப்படியாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட்ட பின்னரே பாடசாலைகள் திறக்கும் என்றும் கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடத்தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...