Main Menu

உலகின் முதல் மாற்று அறுவை சிகிச்சையில் மனிதனுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம்!

மனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம், பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார்.

57 வயதான டேவிட் பென்னட், பால்டிமோரில் ஏழு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு மூன்று நாட்களுக்குப் பிறகு நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பென்னட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாக இந்த மாற்று அறுவை சிகிச்சை கருதப்பட்டது, இருப்பினும் அவர் உயிர் பிழைப்பதற்கான நீண்ட கால வாய்ப்புகள் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இதனை செய்யாவிட்டால் பென்னெட் இறந்துவிடுவார் என கருதப்பட்டதால், இதனை மேற்கொள்ள மேரிலேண்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கு, அமெரிக்க மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பு சிறப்பு பரிந்துரை வழங்கியது.

மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவை பொறுத்தவரை, இது பல ஆண்டு ஆராய்ச்சியின் உச்சத்தைக் குறிக்கிறது. மேலும், இது உலகம் முழுதும் பலரின் வாழ்க்கையை மாற்றலாம்.

கடந்த ஒக்டோபர் 2021ஆம் ஆண்டு நியூயோர்க்கில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், வெற்றிகரமாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்தியதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...