Main Menu

உலகின் மிகப் பெரிய விமானத்தின் முதல் பயணம் ஆரம்பம்

இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த போல் அலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ட்ராடோலான்ச் நிறுவனத்தினால் இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை சுமார் 10 கிலோ மீற்றர் உயரத்திற்கு பறக்க செய்து, அதன் பின்னர் அதிலிருந்து விண்கலத்தை ஏவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்திலுள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும்.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், விண்கலங்களை பூமியின் நிலப்பரப்பிலிருந்து ஏவுவதைவிட, விண்ணிலிருந்து ஏவுவது குறைந்த செலவுடைய இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது

இருவேறு விமானங்களை இணைத்து அமைக்கப்பட்டது போன்று ஆறு இயந்திரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் தனது முதல் பயணத்தின்போது சுமார் 15,000 அடிவரை, அதிகபட்சமாக மணிக்கு 274 கிலோ மீற்றர் வேகத்தில் பறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பகிரவும்...