Main Menu

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 71 இலட்சத்தைக் கடந்தது

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 71 இலட்சத்து 71 ஆயிரத்து 292 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று மாத்திரம் இந்த வைரஸ் காரணமாக 2 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 826 பேர் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 69 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

அதற்கமைய இந்த வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 6 இலட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேலாகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம், 58 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் 66,394 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முறையே அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...