Main Menu

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: பொலிஸார் தடியடி

உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, தடியடி நடத்தி பொலிஸார் கலைத்துள்ளனர்.

உன்னாவோ மாவட்டத்தில் மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ட்ரான்ஸ் கங்கா சிட்டி என்னும் டவுன்ஷிப் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு குறைந்த அளவிலான தொகையை அரசு வழங்கியதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள், சில வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்தே  கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சும்  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பொலிஸார் கலைத்துள்ளனர்.

பகிரவும்...