Main Menu

உத்தரகாண்ட் தேர்தலில் வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்: கெஜ்ரிவால் வாக்குறுதி

பா.ஜனதா 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் இலவச அறிவிப்பு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.

கெஜ்ரிவால்உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்று ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது ‘‘எங்களது அரசு உருவான பிறகு, நாங்கள் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். விவசாயிகள் இலவச மின்சாரம் பெறலாம். நிலுலையில் உள்ள பாக்கித்தொகை தள்ளுபடி செய்யப்படும். 24 மணி மின்சாரம் வழங்க சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் நாங்கள் அதை செய்வோம்’’ என நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளித்தார்.
மேலும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறிமாறி 2000-த்தில் இருந்து மாநிலத்தை கொள்ளை அடிப்பற்கான ஏற்பாடுகளை உருவாக்கினர். மாநிலத்தை அழிப்பதற்கு எதிராக ஒரு கல்லைக் கூட உத்தரகாண்ட் தலைவர்கள் அகற்றவில்லை. ஆளும் கட்சி முதல்வரை பெறவில்லை. 70 வருடத்தில் முதன்முறையாக ஒரு கட்சி முதல்வர் பயனற்றவர் எனத் தெரிவித்துள்ளது’’  எனக் குற்றம்சாட்டினார்.

உத்தரகாண்ட் மாநில மின்சாரத்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் ‘‘வீட்டு நுகர்வோர்க்கு மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். 100 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் 13 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் 100 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளாம். 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்’’ என்றார்.
மாநில அரசு நேற்று 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ள நிலையில், இன்று கெஜ்ரிவால் 300 யூனிட் இலவசம் என அறிவித்துள்ளார்.

பகிரவும்...