Main Menu

வெனிசுவேலா: பொலிஸாருக்கும் கும்பலுக்கும் இடையிலான மோதலில் 26 பேர் உயிரிழப்பு

வெனிசுவேலாவில் வடமேற்கு பகுதியில் பொலிஸாருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையிலான மோதல்களில் நான்கு அதிகாரிகள் உட்பட குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர் என வெனிசுவேலா உள்துறை அமைச்சர் கார்மென் மெலண்டெஸ் தெரிவித்தார்.

தலைநகர் கராகஸில் இரண்டு நாட்களில் ஏற்பட்ட குறித்த மோதல்களில் 10 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், 22 குற்றவாளிகள் இறந்ததாகவும் மெலண்டெஸ் கூறினார்.

மேலும் குறித்த கும்பலிடம் இருந்து 24,000 வெடிமருந்துகள் உட்பட ஆயுதங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...