Main Menu

உடல்நலக் குறைவால் நடிகர் விசு காலமானார்

உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார்.

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் முக்கிய துறைகளில் திறமை வாய்ந்தவர். கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். சென்னையில் கொரோனா அச்சம் காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இறுதிச்சடங்கு குறித்து குடும்பத்தினர் தரப்பில் விரைவில் தெரிவிக்கப்படும்.

விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 1945-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...