Main Menu

ஈரானில் எரிபொருள் விலையுயர்வை கண்டித்து பாரிய போராட்டம் – ஒருவர் உயிரிழப்பு!

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையுயர்வை கண்டித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.

உலகிலேயே பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை குறைவாக விநியோகிக்கப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் அங்கு அதிகளவில் பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுவதால் அதற்கான மானியமும் அதிகமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதற்கு பின்னர், ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மீதான மானியத்தை ஈரான் அரசாங்கம் நீக்கியதை தொடர்ந்து பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய அறிவிப்பின் படி எதிர்வரும் காலங்களில், ஒரு மாதத்துக்கு 60 லீட்டர் பெட்ரோல் மாத்திரமே 15 ஆயிரம் ரியால்கள் விலையில் விநியோகிக்கப்படும்.

அதற்கு மேல் கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு லீட்டர் பெட்ரோலுக்குமான விலை 30 ஆயிரம் ரியால்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியம் நீக்கி விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் இருந்து கிடைக்கப் பெறும் வருமானம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...