Main Menu

ஈட்டா புயல் : குவாத்தமாலாவில் நிலச்சரிவில் சிக்கி 150 பேர் வரை உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவைத் தாக்கிய புயலை தொடர்ந்து பெய்த மழை காரணமாக குவாத்தமாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நாட்டின் மத்திய பிராந்தியமான ஆல்டா வெராபாஸில் உள்ள கியூஜாவில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் அதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக பனாமாவிலிருந்து ஹோண்டுராஸ் மற்றும் மெக்ஸிகோ வரை பேரழிவை ஏற்படுத்தியுள்ளதுடன் அவற்றுக்கிடையே 50 க்கும் மேற்பட்ட வெள்ளம் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது பாதுகாப்பு தரப்பினர் மீட்பு பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக மத்திய அமெரிக்காவைத் தாக்கும் கடுமையான புயல்களில் ஈட்டாவும் ஒன்றாகும், இந்த பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு தொடரும் என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் எச்சரித்துள்ளது.

பகிரவும்...