Main Menu

இஸ்லாமிய அடிப்படை வாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும் நோக்கிலான சட்டமூலம் நிறைவேற்றம்!

பிரான்ஸில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டமூலம், நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் நோக்கில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும் நோக்கில் வரையப்பட்ட 18ஆவது சட்ட மூலம் நாடாளுமன்றக் கீழவையில் கொண்டுவரப்பட்டநிலையில், இதற்கு ஆதரவாக 347 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். 65பேர் வாக்களிப்பைப் புறக்கணித்தனர்

மசூதிகள், பாடசாலைகள், விளையாட்டு சங்கங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய அந்த சட்டமூலம் மீது நீண்ட காலமாக விவாதங்கள் நடைபெற்று வந்தன.

இந்த சட்டமூலம் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் ஒட்டுமொத்த இஸ்லாம் மதத்துக்கு எதிரான அச்சம் உருவாக்கப்படுவதாகவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமர்சித்து வந்தனர்.

பல ஆண்டுகளாகவே இத்தகைய ஒரு சட்ட சட்டமூலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், நைஸ் நகரில் கடந்த ஆண்டு ஒக்டோபரட மாதம் பேராசியர் ஒருவர் மத அடிப்படைவாதியால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு, அதற்கான பணிகள் தீவிரமடைந்தன.

புதியச் சட்டத்தின்படி, ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள், இருப்பிடம் போன்றவற்றைத் தெரிவித்து, அதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்

பகிரவும்...