Day: February 20, 2021
பரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவு – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
பருவநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் வெளியேற்றம் போன்ற காரணங்களால் புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் 200 நாடுகள் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தம் காரணமாக கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறி அமெரிக்கமேலும் படிக்க...
ரஷிய எதிர்க்கட்சி தலைவரின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது முறையீட்டு நீதிமன்றம்
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பரோல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு (வயது 44) மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும்மேலும் படிக்க...
செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய படங்கள்
நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் படம் பிடித்து அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாமேலும் படிக்க...
ஜம்மு- காஷ்மீர் விவகாரம்: ஐ.நா அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம்
ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளுக்கான, ஐ.நா.துாதரக அலுவலகத்தின் இணைய தளத்தில், ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. குறித்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாவது, ஜம்முமேலும் படிக்க...
இணை அனுசரணை நாடுகள் நிறைவேற்ற உள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை- கஜேந்திரகுமார்
ஐ.நா.மனித உரிமை பேரவையில் இணை அனுசரணை நாடுகள் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகளால் ஐ.நா. ஆணையாளருக்கு கடிதம் அனுப்பிவைப்பு!
வடக்குக் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி’ என்ற தலைப்பிடப்பட்டு இன்று (சனிக்கிழமை) இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
அரச இயந்திரத்தால் ஒருமித்த நாடு: மனதளவில் இரண்டு நாடுகள்- ஸ்ரீதரன் சுட்டிக்காட்டு
அரச இயந்திரத்தால் ஒருமித்த நாடாகவும் மனதளவில் இரண்டு நாடுகளாகவும் இலங்கை இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமைக்காக கிளிநொச்சி பொலிஸாரினால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில்மேலும் படிக்க...
இஸ்லாமிய அடிப்படை வாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும் நோக்கிலான சட்டமூலம் நிறைவேற்றம்!
பிரான்ஸில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டமூலம், நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் நோக்கில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும்மேலும் படிக்க...