Main Menu

இளைஞர்கள் கடத்தப்பட்டமை தெரியும் வசந்த கரன்னகொட…

தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தனக்கு தெரியுமென முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அளித்துள்ள ‘பி’ அறிக்கையிலேயே இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கடத்தப்பட்ட இளைஞர்களைப் பற்றி முதன்முதலில் 2009 மே மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போதும் கிழக்கு கடற்படைத் தலைமையகத்தில் இருந்த இளைஞர்களை விடுவிப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு அட்மிரல் கரன்னகொட தவறிவிட்டார் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.

இதன் மூலம், குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை மறைத்து குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைப் பாதுகாக்க அவர் முனைந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதென குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...