Main Menu

இலவசமாக்கப்பட்ட Quai Branly அருங்காட்சியகம்.

முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac மறைந்ததை அடுத்து, Quai Branly அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளது.  பரிசில் உள்ள Quai Branly அருங்காட்சியகம் வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்படும் என அவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. <<இந்த அருங்காட்சியகம் Jacques Chirac இன் மறைவில் துயர் கொள்கின்றது. துயரில் பங்குகொள்ள பொதுமக்களையும் அழைக்கின்றோம். இந்த கலாச்சார பாரம்பரிய சேகரிப்பையெல்லாம் இலவசமாக காணும்படி ஏற்பாடு செய்துள்ளோம்>> என கலாச்சார பண்பாட்டு அமைச்சர் Franck Riester  தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி Jacques Chirac, 1998 ஆம் ஆண்டு இந்த அருங்காட்கியகத்தை அமைக்க ஆலோசனை வழங்கியதுடன், 2006 ஆம் ஆண்டு திறந்தும் வைத்தார். 

பகிரவும்...