Main Menu

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் ரஷ்யா தலையிடாது!

“இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்சனை தொடர்பாக ரஷ்யா தலையிடவோ, விமர்சிக்கவோ போவதில்லை” என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஸகார்யன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையால் தனது வெளியுறவுக் கொள்கையை சுதந்திரமாகச் செய்படுத்த முடியும். இலங்கையில் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை நான் தவிக்கின்றேன்.

முக்கியமாக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் விமர்சிக்கவோ அல்லது தலையிடவோ தாம்  அமெரிக்க தூதரோ அல்லது பிரித்தானிய உயர் ஸ்தானிகரோ அல்லது மேற்கத்திய தூதர்களோ அல்ல” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...