Main Menu

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் பெரும் வீழ்ச்சி!

2020 ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 22 வீதம் குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் பதிவாகிய மிகக் குறைந்த ஏற்றுமதி வருமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆடை ஏற்றுமதியில் 3.9 அமெரிக்க டொலர் என்ற அதிகூடிய வருமானம் கடந்த 2019ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது.

இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதியில் 22.15 வீதம் மற்றும் 1.4 பில்லியன் டொலரும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியில் 21.36 வீதம் மற்றும் 1.3 பில்லியன் அமெரிக்க டொலரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சிக்கு உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தோற்றே பிரதாக காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...