Main Menu

இலங்கைக்கு இது மிக முக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு

வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கிச் செல்வது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “இலங்கையின் வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரை, இது மிகவும் முக்கியமான வாரமாகும். ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கிச் செல்வது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது.

எனினும், கௌரவமான நாடொன்றின் பொறுப்புவாய்ந்த பிரஜைகள் என்ற அடிப்படையில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதிலும் தண்டனைகளிலிருந்து விலகுவதை முடிவிற்குக் கொண்டுவருவதிலும் முனைப்புடன் செயற்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...