Main Menu

இரு விமான சேவைகளுக்கு தலிபான்கள் கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சர்வதேச விமான சேவை மற்றும் ஆப்கானிஸ்தானின் காம் ஏர் விமான சேவை ஆகியவை காபூலில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படும் என ஆப்கானிஸ்தானின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது விதிகளை பாகிஸ்தானின் சர்வதேச விமான சேவை மற்றும் ஆப்கானிஸ்தானின் காம் ஏர் விமான சேவை ஆகியன மீறினால் விமான நிறுவனங்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காபூலில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் ஒவ்வொரு பயணியிடமும் 250 டொலர்கள் வரையில் கட்டணம் அறவிட்டதை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய விதிகள் மீறப்படுகின்றபோது, அதுசம்பந்தமாக முறைப்பாடுகளை வழங்குவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தானின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் கோரியுள்ளது.

அத்துடன், ஆவணங்களில் காணப்படுகின்ற மோசடிகள் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தானின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...